Sunday, July 14, 2019

இந்து பாக சாஸ்திரம்

இந்து பாக சாஸ்திரம்

(Last updated 8-4-2020: cooking vessels) 
மன்னிக்கவும். சமையல் பாத்திரங்களின் ஓவியங்களை நகல் எடுக்க இயலவில்லை. மீண்டும் முயல்வேன்.  

பல ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்குச் சென்றிருந்தபோது, ‘இந்து பாக சாஸ்திரம்’ என்னும் ஒரு நூலை, லஸ் சர்ச் சாலையின்  நடைபாதையில் பழைய புத்தகங்கள் விற்பவரிடம் கண்டேன். அதன் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தபோது, அது மிகவும் பழைமையானது என்றும் கிடைத்தற்கரியதென்றும் தெரிந்தது. ஒரு சிறிய தொகைக்கு அதை எனக்கு விற்ற பெரியவரிடம் கூடுதலாகப் பணத்தைக் கொடுத்து என் நன்றியையும் கூறி அந்தப் புத்தகத்துடன் கானடா திரும்பினேன். 

நான் வாங்கிய அந்தப் புத்தகம் 1952-ல் ஆறாவது பதிப்பாக வெளியிடப்பட்டது. அந்நூலின் உள்ளே அது லேடி கார்மைக்கேலுக்கு (Lady Carmichael) சமர்ப்பணம் செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தகத்தின் தொடக்கப் பக்கங்களில்  விக்டோரியா மகாராணி இந்தியப் பெண்மணிகளின் நலனுக்காக ஆற்றியுள்ள பணிகளைப் பற்றிப் புகழ்ந்து கூறுவதையும் காணலாம்.  விக்டோரியா மகாராணி 1876 முதல் 1911 வரை இந்தியாவின் சக்ரவர்த்தினியாக ஆட்சிபுரிந்தார். 1911-ல் அவரது மரணத்தின் பின்,  லார்ட் கார்மைக்கேல் சென்னையின் கவர்னராக நியமிக்கப்பட்டார் (https://en.wikipedia.org/wiki/Thomas_Gibson-Carmichael,_1st_Baron_Carmichael). இவர் காலத்தில் 1905-06-ல் இளவரசர் ப்ரின்ஸ் ஆஃப் வேல்ஸ் சென்னைக்கு  வருகை செய்தார்; ( http://www.rvi1905-6.com/madras--programme-during-royal-visit.html ).
1912 வரை சென்னை கவர்னராக இருந்த கார்மைக்கேல் காலத்தில் இந்து சாஸ்திரம் என்னும் இந்நூலின் முதல் பதிப்பு அச்சிடப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இப்போதும் (சுமார் 106 ஆண்டுகளுக்குப் பின்னரும்) இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ள, மிக விஸ்தாரமாகவும், மிகுந்த கவனத்துடனும் தரப்பட்டிருக்கும்  சமையல் குறிப்புகளும், வழிமுறைகளும், இன்றும் நம்மால் பின்பற்றக் கூடியனவாய் இருப்பது வியப்பைத் தருகிறது.

’யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’  என்ற நோக்கில் இந்த நூலின் சில பகுதிகளை ஒளிப்பதிவு செய்து இவ்விழையில் இட முயன்றுள்ளேன். படித்துக் கருத்துக் கூற வேண்டுகிறேன். (அவற்றின் உருவைக் கணினி வழியே பெரிதாக்கிப் படிக்க வேண்டி வரலாம்.)

 முகப்புப் பக்கம்
கவர்னரின் மனைவிக்கு நூல் சமர்ப்பணம்












4 comments:

  1. Can u send me this PDF sir... please

    ReplyDelete
  2. Sir, this book is available in pdf format in archive.org website..

    ReplyDelete
  3. Download link கிடைக்குமா ஸார்

    ReplyDelete